திடீரென்று “இந்தியா ருடே” (India Today) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற பின் யோகி இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார். […]
வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கிவிட்டனர். இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைபற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. […]
இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது….. பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி, கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம், பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு: “அன்பார்ந்த தமிழீழ மக்களே !விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் […]
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக, […]
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனதுஉயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓர் சூழ்ச்சிபொறிக்குள் தள்ளியதோ அவ்வாறுதான் இந்த ஆண்டிலும் சிங்கள அரசு, இந்திய அரசினை மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் தனது பயங்கரவாதம் என்ற சூழ்ச்சி திட்டத்தில் சிக்குற செய்து எமது விடுதலை போராட்டத்தினை இக்கட்டான […]
காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்துதிலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தனர் . ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர். வாகனம் நல்லூர் கந்தசாமி […]
நினைவேந்தல், நிகழ்வு அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுதல் போன்றவற்ற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞரர் யுவதிகளை சிறிலங்கா காவல்துறையும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்திற்கான அமைப்பு ( ITJP ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் ITJP யின் சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் விசாரணை அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அவர்கள், 2019 நவம்பரில் கோட்டாபாய […]
யாஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் இயக்குனரும் 2000-2004 வரையான நோர்வேயின் மத்தியஸ்த சமாதான நடவடிக்கையின் போது கொழும்பில் பிபிசி நிருபராக பணியாற்றியவருமான பிரான்சிஸ் ஹாரிசன் விசேட கட்டுரை தங்கள் சட்டபூர்வ அமைதிவழி அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் இளையோரின் புதிய தலைமுறையொன்று பாதுகாப்புப் படையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அமைப்பாளர்கள் இந்த அபாயங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் […]
சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில், தனித்தனி கட்சிகளாக செயற்படுவது எம்மை பலவீனப்படுத்துவதுடன் உரிய இலக்கை அடைய முடியாமல் போய்விடும் என மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் […]
இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவு கோரி இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் பிரச்சாரம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். தமிழ் இளையோர் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சவேந்திர சில்வாவை […]