NEWS/EVENTS

சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி மற்றுமோர் பிரித்தானிய நிழல் அமைச்சருடன் சந்திப்பு!

நிழல் அமைச்சர் ஜோனாதன் அஸ்வோத் எம்.பி் தனது ஆதரவை வழங்க உத்தரவாதம் – இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடை செய்யக்கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நோக்கில் பிரித்தானியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் தொடர் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவது அறிந்ததே. அந்த வகையில் பிரித்தானியாவின் தொழில் மற்றும் ஓய்வூதியத்துக்கான நிழல் அமைச்சரும் (Shadow Minister for Work and Pension), லேஸ்டர் தெற்கு (Leicester South) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான, அதி […]
Read more

சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளை தடைசெய்ய பிரித்தானிய நிழல் இராஜாங்க செயலர் ஆதரவு!

தனது முழுமையான ஆதரவை உறுதிசெய்தார் நிழல் இராஜாங்க செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Hon. Wes Streeting அவர்கள் – சிறிலங்கா இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime 2020 ) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கான பிரித்தானியா நிழல் இராஜாங்க செயலரும் (Shadow Secretary of […]
Read more

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு ஆதரவுகோரி மற்றுமோர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு.

முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டார், மரியா கால்பீல்ட் எம்.பி (Maria Caulfield MP) – சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமானவரான, இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை, உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும், பிரித்தானியா அரசுக்கு அழுத்தத்தை வழங்குமாறும் கோரி, மற்றும் ஒரு இராஜதந்திர சந்திப்பு பிரித்தானியாவின் […]
Read more

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு திரேசா வில்லியர்ஸ் எம்.பி முழுமையான ஆதரவு!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானியா வாழ் உறவுகள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பு ! யுத்தக்குற்றவாளியான இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை, உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சட்டத்தின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், மற்றும் ஒரு இராஜதந்திர சந்திப்பு பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், சிப்பிங்பானட் (Chipping Barnet) பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய தெரசா வில்லியர்ஸ்(Rt. Hon. Theresa […]
Read more

சர்வதேச விசாரணை, சவேந்திர சில்வா மீதான தடை கோரிய பாராளுமன்ற முன்பிரேணைக்கு 33 எம்.பி.க்கள் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா மீதான தடை ஆகிய கோரிக்கைகளுடன் பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களுக்காகவும்இ தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்ற அடிப்படையிலும்இ இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச […]
Read more

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு ஆதரவுகோரி மற்றுமோர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்காவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார். மேலும், இலங்கை இறுதி யுத்தத்தின் சாட்சியங்களாக வாழ்பவர்கள், சித்திரவதையில் தப்பித்தவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களான கபிலன் அன்புரெத்தினம், பகிரன் ராசரட்ணம், நிலக்ஜன் சிவலிங்கம், அஜிபன் ராஜ் ஜெயந்திரன் மற்றும் சஜந்தன் மகேந்திரம் […]
Read more

சவேந்திரசில்வாவை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மற்றுமோர் பிரித்தானியா நிழல்அமைச்சர் ஆதரவு!

நிழல் அமைச்சர் மதிப்பிற்குரிய மற் வெஸ்ரேண் (Hon Matt Western MP) அவர்களுடனான சந்திப்பு – இலங்கையில் இடம்பெற்ற தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களுக்காகவும், தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டிவர் என்ற அடிப்படையிலும், இலங்கை இராணுவ தளபதியான சவேந்திர சில்வாவை பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கடந்த சனிக்கிழமை (21/05/2022) அன்று பிரித்தானியாவின் கல்வித்துறைக்கான நிழல் அமைச்சரும் (Shadow […]
Read more

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இறுதி யுத்தம் பற்றிய கண்காட்சியும், இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியும்!

Sri Lanka: War on Civilians கண்காட்சியும், ITJP மற்றும் HRDAG ஆகிய அமைப்புக்களின் இறந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம் (Counting The Dead Project) 2009 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலைசெய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் […]
Read more

பிரித்தானியாவில் மே 1 உலக தொழிலாளர் தின நிகழ்வில் தமிழரின் பாரம்பரிய பறை!

மே1 , மே மாதம் 1 ஆம் திகதி உலகத் தொழிலாளர் தினம் பிரித்தானியாவில் அனைத்துலக நாட்டு மக்களுடன் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றது .இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான பறை இசையுடன் , தமிழர்களின் கலாச்சார உடைகளான வேட்டி , சிவப்பு சேர்ட் அணிந்து உலகத் தொழிலாளர்கள நிகழ்விற்கு பலமாக ஆதரவினைக் கொடுத்து சிறப்பிர்த்து இருந்தனர். இவ் நிகழ்வு லண்டன் FARRINGTON என்ற இடத்தில் ஆரம்பமாகி London Travelsqure என்னும் இடத்தில் மிக உன்னதமாக […]
Read more

பிரித்தானிய உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் இளையோர்

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிரித்தானியாவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கத் யோகலிங்கம் அவர்களின் தேர்தல் பரப்புரைகள் ஹரோ தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது. பழமைவாதக் கட்சியின் (Conservative Party) சார்ப்பில் போட்டியிடும் இவரின் தேர்தல் பரப்புரையில் பிரதான செயற்பாட்டாளர் நிதர்சன் தவராசா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் மேற்படி உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் யோகலிங்கம் அவர்களை வெற்றிபெற வைப்பது பிரித்தானியா வாழ் புலம் […]
Read more