About Parai Voice Of Revolution
A majority of historians say that history of Tamils is a continuation of the Indus Valley civilization that dates back to some 5000 BC. The Indian state of Tamil Nadu and Tamil Eelam encompassing the north and east of Ceylon form the motherland of these Tamils.
Percussion musical instruments- “Parai” – of the Tamils had been in use from the Sangam period of the rule of the Chera, Chola and Pandya dynasties. An upsurge of feelings is easily found through playing Parai music. The strength of its tone led to this instrument being used as a medium of communications.
At the beginning rulers also used the Parai instrument for conveying proclamations to subjects, call to arms, battle field reports and for warnings as to natural disasters.
In addition, Parai was also used as percussion during festivities, tragic events, funeral processions, religious rites, weddings and during fun events. Parai’s rhythmic has a stimulating effect on listeners that makes them sway/leap.
“Parai voice of revolution” troupe has embraced this ancient Parai musical instrument to symbolize Tamils among the diverse communities living in Britain.
In this modern age, Parai music is played at every protest held in prominent London locations demanding justice over genocide committed by the Sri Lankan government in 2009. Thereby it has become an effective medium to easily convey the injustice committed to our community among the rest of the community. On the one hand, it is a source of enjoyment for other communities and on the other is medium for conveying the tragedies of Eelam Tamils.
In addition to preserving our values among the diaspora states, Parai music is used by the ‘Drums Band Music Group’ of the transnational Government of Tamil Eelam at national events and the demonstrations for our rights. We express our thanks to the interesting introduction to Parai music provided by Mr.Mayuran, an activist for the liberation of the motherland.
கி.மு ஏறக்குறைய 5000ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் தமிழ் மக்களின் வரலாறு எனப் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது. இதில் தமிழ் மக்களின் தாயகமாக இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடும்,இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழீழமும் விளங்குகிறது.
இத்தமிழ் மக்களால் தோலிசைக்கருவியாக அவர்களின் வரலாற்றுக் காலமாகிய சங்க காலம் தொட்டு மன்னர்கள் காலமாகிய சேர, சோழ, பாண்டியர்களின் காலங்களில் இருந்து பறை இசை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இப்பறையிசையானது எழுச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒலியைக் கொண்டிருப்பதால் இது ஒரு செய்தி ஊடகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலங்களில் மன்னர்கள் அரச செய்தியினை குடி மக்களுக்கு அறிவிப்பதற்கும்,போருக்கு மக்களைத் தயார்படுத்தல்,யுத்தநிலவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தல்,இயற்கை அனர்த்தங்களை மக்களுக்குத் தெரிவித்தல் போன்ற தேவைகளுக்கும் இப் இப்பறை இசையைப் பயன்படுத்தியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் மங்கலகரமான நிகழ்வுகள், துக்க நிகழ்வுகள், மரண ஊர்வலங்கள், சமய சடங்குகள்,திருமண நிகழ்வுகள், கேளிக்கை (fun) நிகழ்வுகளில் இப்பறையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.இப்பறையிசையின் சிறப்பு என்னவெனில் கேட்பவர்களுக்குப் புத்துணர்ச்சி அளித்துத் துள்ளியாட வைக்கும் லயத்தினைக் கொண்டது.
இவ்வாறு பழம் பெரும் வரலாற்றைக் கொண்ட பறையிசையானது மேலைத்தேய கலாசாரத்தவர்கள் மத்தியிலும், மற்றும் பல் கலாசாரத்தவர்கள் வாழும் பிரித்தானியாவில் “தமிழ் இனத்தை” அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக “parai voice of revolution” குழுவினராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பறையிசையானது இந்நவீன காலத்தில் வளர்ச்சியடைந்த லண்டன் மாநகரத்தின் பிரசித்தி வாய்ந்த இடங்களிலெல்லாம் ஈழத்தமிழர் 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனவழிப்புக்கு எதிரான நீதி கேட்கும் போராட்டங்களில் எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எமது இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியினை பல சமூகத்தவர் மத்தியில் இலகுவாக எடுத்துச்செல்லும் ஒரு உன்னத ஊடகமாக பறையிசை இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் பலசமூகத்தவர்களைத் துள்ளியாட வைத்து மகிழ்வித்தும், இன்னொரு புறம் ஈழத்தமிழர் தமது இனத்தின் துன்பங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது உதவுகிறது.
அது மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசங்களில் எமது விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசிய “drums band music group”ஆக தமிழர்களின் தேசிய நிகழ்வுகளிலும், உரிமைப் போராட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பறை இசை தொடர்பான அழகிய அறிமுகம் ஒன்றை ஆக்கித் தந்த தாயக விடுதலைச் செயற்பாட்டாளர் திரு. மயூரன் அவர்களுக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Contact
- contact@paraivoiceofrevolution.org
“The yearning of Tamils is Tamil Eelam Motherland”
Committee of Parai Voice of Revolution.