பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்!

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமேங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வ்வாறான நிலையில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அந்த வகையில் பிரித்தானிய தலைநகர் லண்டன் உள்ள பிரதமர் வாசல்த்தால முன்றலிலும் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் பிரதமர் வாசல்தலத்தில் முன்னால் காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் சிலர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருந்தனார்.

மேலும் மாலை 3 மணியளவில் தமிழீழ தேசிய பாடலுடன் தேசிய கொடியேற்றமும், பிரித்தானியா தேசிய கீதத்துடனும் ஆரம்பமாகி, முள்ளிவாய்க்கால் எனும் தலைப்பில் சொற்போழிவும், உணர்ச்சி பூர்வமான பாடல்களும் இடம்பெற்றருந்தன. பின்னர் இறுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்பட்டது. இதில் இளைஞர்கள் அதிகளவில் பங்குபற்றியிருந்தனார்.

மேலும் இலங்கையில் போறினால் உயிரிலந்தவர்களை பெயர் விபரங்களை ஆவணபடுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை சட்ட ரீதியாக நிரூபிக்கும் நோக்கில் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP தகவல்களை விஞ்சான ரீதியாக ஆராய்ந்து உறுதிப்படுத்தும் அமெரிக்காவில் உள்ள HRDAG என்ற நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்துவரும் இறந்தவர்களின் விபரங்களைத்திரட்டும் பணியும் அங்கு அதன் செயற்குழுவினால் முன்னெடுக்கப்படிருந்தது.