“The Family man 2” திரைத் தொடரை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • “The Family man 2” திரைத் தொடரை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
ஈழத்து  விடுதலைப் போராட்டத்தினை திரிவுபடுத்தியும், தமிழர்களின் கலாச்சார, பண்பாட்னை இழிவுபடுத்தியும் தயாரிக்கப்பட்ட “The Family man 2” திரைத் தொடரினை Amazon நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையான Amazon Prime இல் ஒளிபரப்பு செய்தமைக்கு எதிர்பையும், வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து  பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் இன்று (21.06.2021)  Amazon நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்திற்கு முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் ஈழ மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன அதனை இழிவுபடுத்தும் உரிமை எவருக்குமில்லை” போன்ற கருத்துக்களை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.