முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக பலமுறை உறுதியளித்திருந்தாலும், அரசியல் கைதிகளை தடுத்து வைக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையில் தீர்வு காண தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருந்தால் முதலில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.