தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் போராளியான 2வது லெப்டினன்ட் மாலதி அவர்கள் தமிழ் ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்து இன்றுடன் முப்பதினான்கு ஆண்டுகள்

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் போராளியான 2வது லெப்டினன்ட் மாலதி அவர்கள் தமிழ் ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்து இன்றுடன் முப்பதினான்கு ஆண்டுகள்

கடந்த கிழமை உலக தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் நினைவு நாளும் 2ஆம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளும் பிரித்தானியாவில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடாத்தப்பட்டது இதில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்துகொண்டு வேங்கைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தி அவர்களுக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.

தமிழ் பெண்களின் வீரத்தையும் எழுச்சியையும் உலகறியச்செய்யும் நாளாக அக்டோபர் 10.திகதி எம்மவர்களால் கடைபிடிக்கப்படுகின்றது எமது விடுதலைப்போரில் முதற்க்க்களப்பலியான பெண்போராளி 2ம் லெப் மாலதியின் 34 ம் ஆண்டு நினைவு நாளன்று உலகத்தமிழர் வரலாற்று மையம் ஐக்கியராச்சியத்தின் பெண்கள் அமைப்பினரால் எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன .இதில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பங்கு கொண்டு தமது நினைவாஞ்சலியை செலுத்தினர் .