NEWS/EVENTS

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா மீது தடைவிதிக்குமாறு அவுஸ்ரேலியாவில் விண்ணப்பம் தாக்கல்!

ஜெகத் ஜெயசூரியா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தத்தவறிய அவுஸ்திரேலியா – புதிய மக்னெஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு கொடூர யுத்தத்தில் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த இராணுவப்படைக்கு தலைமைதாங்கிய சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா போர்க்குற்வாளி என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவிற்குள் விஜயம் செய்ய அனுமதித்ததுடன் அவர்மீது பொலிஸார் விசாரணை நடத்தத் தவறியுள்ளனர் என கவலை வெளியிட்டுள்ள புலம் பெயர் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் […]
Read more

நாடாளுமன்றில் நினைவுகூறப்பட்ட தியாக தீபம் திலீபனின் இறுதி வார்த்தைகள்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். மேலும் இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் […]
Read more

சவேந்திரசில்வாவினை தடை செய்யக் கோரி தொடரும் உயர்மட்ட இராஜதந்திர நகர்வுகள்

பிரித்தானிய தொமிற்கட்சி எம். பி முகமட் யாசின் உடன் சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் பெட்போர்ட் மற்றும் கெம்ஸ்ரன் (Bedford and Kempston) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் யாசின் (Mohammad Yasin) அவர்களுடன் பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட […]
Read more

கோட்டாபயவுக்கு தலையிடியை ஏற்படுத்திய புலனாய்வு அறிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில், அ ந்த அறிக்கையானது அரசாங்கத்திற்கு அவ்வளவு நல்லதாக இல்லை என கூறப்படுகின்றது. மக்கள் மத்தியில் ராஜபக்ச அரசாங்கத்திற்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும், தீவிர ஆதரவை வெளிப்படுத்தியர்கள்கூட மாற்றுவழியை நாடுகின்றதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல அரசாங்கத்தின்மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு 17 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, விமல் வீரவன்ச, […]
Read more

போர்க்களமான இலங்கை.. அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகை..

இலங்கை நாட்டில் வரலாறு காணாத வகையிலான பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அனைத்து பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இலங்கையின் ஜி.டி.பி. மதிப்பு -16.3 சதவீதம் வரை குறைந்துள்ளதால் இலங்கையின் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அந்நாட்டில் சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் […]
Read more

மரணச் சான்றிதழுடன் ஒரு இலட்சம் ரூபாய், காணி வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமக்கு உண்மையும் நீதியும் மட்டுமே வேண்டும் என்றும் இழப்பீடும் தேவையில்லை என்றும் தெரிவித்தே அவர்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.
Read more

சவேந்திரசில்வாவை பிரித்தானியா தடைசெய்ய ஆதரவுகோரி ஹென்றி சிமித் எம்பியுடன் சந்திப்பு

பிரித்தானிய தமிழ் இளையோரின் தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள் – இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் கிரெளளி (Crawley) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஹென்றி சிமித்(Hon. Henry Smith MP) அவர்களுடன் பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட சந்திப்பு ஒன்று இன்று […]
Read more

தமி்ழ் அரசியல் தலைவர்கள் இணைந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு மேலும் ஒரு கடிதம்.*

– இலங்கை இராணுவ அதிகாரிகளை பிரித்தானியா தடை செய்ய மேலும் மூன்று முக்கிய தலைவர்கள் வலுயுறுத்தல் –  அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு, மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் மோதல்களின் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான அதி மதிப்பிற்குரிய ரரீக் அஹமட் பிரபு (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) அவர்கள், இலங்கையில் தொடரும் கடத்தல்கள், சட்டவிரோத கைது, சித்திரவதை, […]
Read more

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தொடரும் புலம்பெயர் தமிழர்களின் நகர்வு

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர நடவடிக்கை ஒன்றினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக […]
Read more

சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய எம்.பி. விரேந்திர சர்மா பகிரங்க கோரிக்கை!

(Virendra Sharma MP) பிரிந்தானிய வாழ் தமிழ் இளையோரின் விடாமுயற்சின் விளைவாக அதிகரித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானியாவின் Earling மற்றும் Southall பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய விரேந்திர சர்மா (Virendra Sharma MP) அவர்கள் […]
Read more