ஈழத்து விடுதலைப் போராட்டத்தினை திரிவுபடுத்தியும், தமிழர்களின் கலாச்சார, பண்பாட்னை இழிவுபடுத்தியும் தயாரிக்கப்பட்ட “The Family man 2” திரைத் தொடரினை Amazon நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையான Amazon Prime இல் ஒளிபரப்பு செய்தமைக்கு எதிர்பையும், வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் இன்று (21.06.2021) Amazon நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்திற்கு முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.“உலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் ஈழ மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன அதனை…
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் ஆட்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வாயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுக்காப்பிலும் இருந்து வருகின்றனர். இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிலந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கில் காணாமல் […]
இலங்கையர்களின் அரசியல் தஞ்ச கோரிக்கை தொடர்பில் வெளியான புதிய வழிகாட்டுதல்கள் பிரித்தானியாவில் உள்ள இலங்கை பிரஜைகள், குறிப்பாக அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்கள், இங்கு இருந்தவாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான (அல்லது அவ்வாறு கருதப்படக்கூடிய) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபவதன் விளைவாக, அவர்கள் இலங்கை திரும்பும் போது இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து வைக்கபபட்டு, சித்திரவதை மற்றும் இதர துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆபத்து தொடர்பாக ஆராயப்பட்ட KK & RS (Sri Lanka) என்னும் முக்கிய வழக்கில், குடிவரவு மற்றும் […]
இரண்டாம் தலைமுறைத் தமிழ் இளையோரின் விடாமுயற்சி! சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய அரசு, தனது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் (Global Sanction Regime) கீழ், பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரித்தானிய தொழில் கட்சி சார்பில், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் நிழல் அமைச்சரான மதிப்பிற்குரிய ஸ் ரீபன் கினொக் அவர்கள் (Rt. Hon. Stephen Kinnoc […]
பிரித்தானியாவில் விடுதலைமப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப்பெறும் கலந்துரையாடல்கள் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் East Ham தொகுதிக்கான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Stephen Timms எம்.பி.யுடனான சந்திப்பினை மேற்கொண்ட குழுவினர், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு ஆதரவாக பாராளுமன்றில் குரல் எழுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதான செயற்பாட்டாளர் குலசேகரம் சதீஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு பிரித்தானியாவின் கோவிட் விதிமுறைகளுக்கு […]
யாழ்.நகரப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் ட்ரோன் கமரா மற்றும் பொலிஸ் ரோந்து நடவடிக்கையின்போது தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகர்பகுதியிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் ட்ரோன் கமரா மூலம் பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு மற்றும் விமானப்படை பிரிவினர் இணைந்து சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பயணத்தடையை மீறி, தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகயாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.இன்று காலை யாழ்.நகரம் நல்லூர், […]
இலங்கையின் சுகாதார அமைச்சு, ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரக இணையத்தளங்கள் மீது இணைய வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளங்கள் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கணனி அவசரத் தரவு மையம் அறிவித்துள்ளது. மே 18 இல் இணையத்தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கை கணனி அவசர தரவு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் நான்காம் தடவையாக இலங்கை அரசினதும் சீன தூதரகத்தினதும் இணையங்கள் முடக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு,ரஜட்ட பல்கலைக்கழகம், சீனத்தூரகம் […]
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று நள்ளிரவு முதல் […]
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமேங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வ்வாறான நிலையில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அந்த வகையில் பிரித்தானிய தலைநகர் லண்டன் உள்ள பிரதமர் வாசல்த்தால முன்றலிலும் ஒக்ஸ்போர்ட் நகரிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் பிரதமர் வாசல்தலத்தில் முன்னால் […]
காசா:இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போரை நிறுத்த, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம். இங்குள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்ற, இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டதை அடுத்து, இரு தரப்பிலும் மோதல் வெடித்தது. வான்வழி தாக்குதல் ஒருவாரமாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகரில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல கட்டடங்கள் தரைமட்டமாயின. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினரும், இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில், […]