News

மோதல் உச்சகட்டம்!: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை ராக்கெட் வீசி தகர்த்த இஸ்ரேல்..!!

காசா: பாலஸ்தீனத்தில் உள்ள மேலும் ஒரு 13 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் ராக்கெட் வீசி தகர்த்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வந்தன. பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ஏவுகணைகளை கொண்டு பாலஸ்தீனத்தில் உள்ள பல கட்டிடங்களை இஸ்ரேல் தகர்த்து வருகிறது. கடந்த 1 வாரத்தில் மட்டும் 4 கட்டிடங்கள் தகர்த்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காசாவில் அமைந்திருக்கும் 13 மாடி கட்டிடத்தை இஸ்ரேல் படையினர் குறிவைத்து தாக்கியுள்ளனர். இந்த […]
Read more

முள்ளிவாய்க்காலில் பெரும் பதற்றம்

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது என தடை ஏற்படுத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் […]
Read more

பாகம் 11: மே-12முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

இறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-12) முள்ளிவாய்க்காலில இறுதியாக் செயல்பட்டுவந்த தற்காலிக மருத்துவமனையும் செயலிழக்கிறது. இராணுவத்தின் தொடர் ஷெல் வீச்சுக்கள் வைத்திய சதலைக்குள்ளும் அதன் அருகிலும் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடிக்க தொடங்கின. இதனால் அங்கு காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளர்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவாறு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக தூக்கிசென்றனர். ஐ.சி.ஆர்.சி.யின் கப்பலில் அவசர தேவையுடைய நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுகொண்டிருந்தனர். இதேவேளை மிகவும் மோசமாக […]
Read more

பாகம் 10: மே-12முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

இன்று (12) பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது. காயமடைந்தவர்களின் தொகை தெரியவில்லை. கொல்லப்படுபவர்களின் தொகை தெரியவில்லை. “ஈழநாதம் செய்திஆசிரியரின் குடும்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுவிட்டார்களாம்” இப்படி எல்லாரும் வந்து சொல்லினம். எனக்கு நெஞ்சில இருந்து ஊனம் வடிய ஆரம்பித்துவிட்டிருந்தது. என்னை பார்த்திட்டு போறவர்கள் “சுரேன் இறக்கப்போரான் போல” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை கேட்கமுடிகிறது.” முள்ளிவாய்க்கால் இறுதியாக இருந்த வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டேன். திடீரென எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றது. வைத்தியசாலை முற்றத்தில் விழுந்த எறிகணையில் பலர் கொல்லப்பட்டார்கள். “அருகில் […]
Read more

பாகம் 09: மே-10முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர் மூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8)  நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை  மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. வெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான அந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல்  வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் […]
Read more

பாகம் 8: மே-10முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone கடந்த 12ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற(No Fire Zone) பாதுகாப்புவலயம்  இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும்அறிவித்து, அதன்பின்னர்  அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்தது. 2 சதுர கிலோமீற்றருக்கும் […]
Read more

சர்வதேச தமிழர்களால் குவியும் அழுத்தம்: ஜெனரல் சவேந்திர சில்வாவை தடை செய்யுமாறு பிரிதானியா அரசுக்கு அழுத்தம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இராணுவத்தளபதி சவேந்திரசில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தடைசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தினை வலிறுத்தவேண்டும் என இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையம் (ICPPG) கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 12 ஏப்பிரல் 2021 அன்று, சர்வதேச சட்ட நிபுணரான யாஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கும் ITJP என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு சவேந்திரசில்வா தொடர்பில் 50 பக்க […]
Read more

பாகம் 07: மே-07முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர் மே-07 புதுக்குடியிருப்பு, இரணைமடு பகுதிகளினூடாக இலங்கை இராணுவத்தின் முன்னகர்ந்துகொண்டுவர பெரும் தொகையான மக்கள் ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பிற்குள் ஒடுங்கும் நிலைமை உருவானது. இந்நிலையில் இதனைப்பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் தன் கோரத்தனத்தை மேலும் அதிகரித்தது. இதே நாள் 7 ஆம் திகதி (மே 07) அந்த சிறிய பகுதிக்குள் அடைபட்டு போன அப்பாவி மக்கள் மீது க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக அன்று பல உயிர்களை பலியெடுத்தனர். குலசேகரம் .சதீஷ்
Read more

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு […]
Read more

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் !

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய பிரதமர் வாசல்தலம் முன் ஒன்று கூடிய புலம்பெயர் வாழ் தமிழர்களால் 28/04/2021 புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். தடையை நீக்க கோரி கடந்த 23/04/2021 அன்று வேல்ஸிலிருந்து ஆரம்பமான நடைபயணம் சற்று முன்னர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் உள்ள பிரதமர் வாசல்தலம் முன்றலை அடைந்துள்ள நிலையில் அங்கு ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வேல்ஸிலிருந்து சுமார் 130 மைல் மேல் நடந்து நேற்றைய தினம் […]
Read more