
விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய பிரதமர் வாசல்தலம் முன் ஒன்று கூடிய புலம்பெயர் வாழ் தமிழர்களால் 28/04/2021 புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
தடையை நீக்க கோரி கடந்த 23/04/2021 அன்று வேல்ஸிலிருந்து ஆரம்பமான நடைபயணம் சற்று முன்னர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் உள்ள பிரதமர் வாசல்தலம் முன்றலை அடைந்துள்ள நிலையில் அங்கு ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்



வேல்ஸிலிருந்து சுமார் 130 மைல் மேல் நடந்து நேற்றைய தினம் லண்டன் மாநகருக்குள் நுழைந்த தமிழர்கள் குழு இன்று புதன்கிழமை காலை லண்டன் ஈலிங் அம்மன் ஆலைய முன்றலிருந்து பிரித்தானிய பிரதமர் வாசல்தளத்தினை நோக்கி தமது இறுதி நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பிரித்தானியவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தினில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பா யம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.
இந்தகாலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானிய வாழ் மக்கள் தடை நீக்கத்துக்கான அழுத்தத்தினை பிரித்தானிய அரசு முன்வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டுமென்ற நோக்கிலும் இந்த மாபெரும் நீண்ட தூர பரப்புரை நடைபயணம் இடம்பெற்றது .இதில் ஈழ ஆர்வலர்களும், இளைஞர்களும் முன் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி வேல்ஸ் (CF99 1SN)ஆரம்பமான இந்த பரப்புரை நடைபயணம் சுமார் 130 மைல்களுக்கு மேல் கடந்து BRISTOL, SWINDON, READING, SLOUGH ஊடக ஆறாவது நாளாக வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரதமர் வாசல்தலத்தை சென்றடைந்தது.