இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம் ,வெடிக்க காத்திருக்கும் மக்கள் புரட்சி

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • இருவாரங்களாக தொடரும் அம்பியின் போராட்டம் ,வெடிக்க காத்திருக்கும் மக்கள் புரட்சி

இலங்கையில் இனப்படுகொலைக்குள் உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் நாளை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்துட்டுள்ளது.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து, அவற்றில் ஒன்றையாவது நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென அம்பிகை ஆரம்பித்த உணவுதவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 15 நாட்களை அடைந்துள்ளது.

இந்நிலையில், அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும்  அவரை காப்பாற்றவேண்டுமெனவும் உலக அரங்கிலிருந்து பிரித்தானியாவுக்கு பல்வேறு அழுத்தங்கள் எழுந்துள்ளதுடன் பிரித்தானியாவில் நாளை மாபெரும் மக்கள் புரட்சி எழுச்சி பேரணியொன்றும் நடைபெறவுள்ளது.

இதனிடையே, வழமைபோல் இன்று  நடைபெறும் மெய்நிகர் (Zoom) வழி அம்பிகை ஆதரவு எழுச்சி நிகழ்வு மும்மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆரம்பமாகவுள்ளதுடன் திருமதி வாசுகி சுதாகர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மகளிரணிப் பொறுப்பாளர், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், ஸ்கொட்லாந்திலிருந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் திரு. சிவகுமார் மற்றும் அரசியல் வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.