
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில் பத்து ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, ஜெனிவாவில் நடைபெறும் ஐநா சபையின் 46வது கூட்டத்தொடரில், இனப்படுகொலை குற்றங்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தார்.. பிரதமர் மோடியிடமும் இலங்கை ஆதரவு கேட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட இருந்த நிலையில், அது இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நிகழ்ச்சி ஒதுக்கீடு சிக்கல்கள் காரணமாக வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.