ஐ.நா மனித உரிமைகள் பேரவைகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • ஐ.நா மனித உரிமைகள் பேரவைகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இந்த நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளது. இந்த நிலையில், 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.