நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது
இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
தீப்பரவலுக்கு காரணம் இதுவரைக்கும் எதுவும் தெரியவரவில்லை. மேலும் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.