ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஈழத்தமிழர்கள் 24 பேரை நாடுகடத்தி ஸ்ரீலங்கா அரசிடம் ஒப்படைத்து துரோகம் செய்து விட்டது!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஈழத்தமிழர்கள் 24 பேரை நாடுகடத்தி ஸ்ரீலங்கா அரசிடம் ஒப்படைத்து துரோகம் செய்து விட்டது!

ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்திலிந்து நாடு கடத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் 24 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையினரால் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 ஈழத்தமிழர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜேர்மனிலிருந்து ஒரு பெண் உட்பட 20 பேரும், சுவிட்ஸர்லாந்திலிருந்து நான்கு பேருமே இவ்வாறு ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

குடிவரவு சட்டங்களை மீறியதற்காக அவர்கள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் அந்த நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

இவர்கள் இன்று காலை 10.37 மணிக்கு ஜேர்மனின் டஸ்ஸெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வாமோஸ் ஏயர்லைன்ஸின் ஈபி -308 என்ற சிறப்பு விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.