மாகாராணியாரின் கணவர் சற்று முன்னர் 99 வயதில் காலமானார் !பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • மாகாராணியாரின் கணவர் சற்று முன்னர் 99 வயதில் காலமானார் !பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

பிரித்தானியாவின் மாகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் பவர்கள் சற்று முன்னர் தனது 99வது வயதில் காலமானார். அவருக்கு நீண்ட நாளாக, இதயக் கோளாறு இருந்து வந்த நிலையில் கடைசியாக 28 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன் நிலையில் அவருக்கு மேலதிகமாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்தே அவர் இன்று காலமானதாக வின்சர் காசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன், கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகு வின்சர் கோட்டைக்கு திரும்பினார்.

அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “எண்ணற்ற இளைஞர்களால் ஈர்க்கப்பட்டவர் இளவரசர்,” என்று கூறியுள்ளார். பிரதமர் இல்லம் அமைந்த டெளனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரிட்டனில் பல தலைமுறை மக்களிடமும் காமன்வெல்த் நாடுகளிலும் உலக அளவிலும் அன்பைப் பெற்றவர் அவர்,” என்றும் கூறினார்.

கோமகனின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவரது இறப்புச் செய்தி அடங்கிய நோட்டீஸ்கள், வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தன.