இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைவு… – உலக தலைவர்கள் இரங்கல்…!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைவு… – உலக தலைவர்கள் இரங்கல்…!

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் அவர்களின் கணவர் இளவரசர் பிலிப் தன்னுடைய 99 வயதில் இன்று உலகத்தை விட்டு மறைத்துள்ளார்.

இங்கிலாந்தின் மகாராணியாக விளங்கும் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி செவ்வாய் கிழமை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் லண்டனில் இருக்கும் தனியார் கிங் எவர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர், தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய போதும், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 9ம் திகதி காலை வின்ட்சர் கோட்டையில் இளவசர் பிலிப் இயற்கை ஏய்தியுள்ளார்.

மேலும் தன் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் காலமானதாக மகாராணி இரண்டாம் எலிசபெத் அறிவித்துள்ளார். இளவரசர் பிலிப் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு நாடுகளின் அரசர்கள், நாட்டின் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், ஸ்வீடன் முதல் இந்தியாவின் பிரதமர்கள் ஆகியோர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கா

அமெரிக்காவின் முன்னாளர் அதிபர் ஜார்ஜ் டபள்யு. புஷ், “இளவரசர் ஒரு நீண்ட சிறப்பான வாழ்வை வாழ்ந்துள்ளார்.” என தெரிவித்துள்ளார். மேலும், “முக்கிய காரணங்களுக்காகவும், பிறருக்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா

பிரிட்டன் மக்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இளவரசர் “ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியவர் மற்றும் சமூக சேவை முன்னெடுப்புகளுக்கு முதல் நபராக நின்றவர்” எனவும் மோதி கூறியுள்ளார்.

பெல்ஜியம்

பெல்ஜியத்தின் அரசர் ஃபிலிஃப், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தனிப்பட்ட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எப்போது முடியுமோ அப்போது மேதகு ராணியை நேரில் சந்தித்து பேச முடியும் என நம்பிக்கை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கியவர் இளவரசர் ஃபிலிப். ஆஸ்திரேலியாவில் பல அமைப்புகளுக்கு அவர் நிதியுதவி வழங்கிவந்தார் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லியார்ட், “கடமையை நிறைவேற்றும் ஒரு நபராகவும், நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும்” இருந்தார் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன், “நியூசிலாந்து மக்கள் மற்றும் அரசு சார்பாக மேதகு ராணி மற்றும் அரச குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.