அமெரிக்கா மற்றும் கனடா மணி வண்ணன் தொடர்பாக ஆராய ஆரம்பித்துள்ளது !

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • அமெரிக்கா மற்றும் கனடா மணி வண்ணன் தொடர்பாக ஆராய ஆரம்பித்துள்ளது !

கொழும்பில் வேலை பார்க்கும் மாநகர ஊழியர்கள், இதே உடைகளை தான் அணிந்துள்ளார்கள். ஆனால் கொழும்பு மாநகர மேயர் ஏன் கைதாகவில்லை என்று முன் நாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். இது இவ்வாறு இருக்க, கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி மணி வண்ணன் கைது தொடர்பாக கடும் ஆட்சேபம் வெளியிட்டுள்ள நிலையில் மேலதிக விபரங்களை கனடா தூதுவர் திரட்டி வருவதோடு. ஒரு நகர மேயரை கைது செய்யும் அளவுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எந்த அளவு அதிகாரம் உள்ளது என்றதில் பலர் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில். மனித உரிமை சபை கடும் விசனம் வெளியிட்டதால்

மெரிக்க தூதுவராலயம் வரை இன் நிகழ்வு தெரிய வந்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் எப்படியான அடக்குமுறை தமிழர்கள் மீது பிரியோகிக்கப்பட்டு வருகிறது ? என்பது தொடர்பாக தெளிவான ஒரு விளக்கத்தை மேற்கு உலக நாடுகளுக்கு இச்சம்பவம் கொடுத்துள்ளது. சாதாரண ஒரு சீருடையை வைத்து, ஒரு மாநகர மேயரை கைது செய்து தற்போது உலக அரங்கில், இலங்கை மியான் மார் நாட்டை விடவும் அடக்குமுறையில் மிகவும் கேவலமான நாடு என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது சிங்கள அரசு.

தற்போது இந்த விவகாரம் சர்வதேச பார்வையில் பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.