தமிழர் வாழும் வடக்கு வடகிழக்குப் பகுதிகளில் – சிங்கள இராணுவம் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை; தேர்தலில் வாக்களித்த பின்பும் கூட அங்குள்ள தமிழர்கள் – சொந்த நாட்டுக் குடி மக்களுக்குரிய சுதந்தர நடமாட்ட உரிமைகளைக் கூடப் பெற முடியாத “பிணைக் கைதிகளைப் போலத்தானே” இருக்கின்றனர்? இன உணர்வுகூட வேண்டாம்; சராசரி மனிதநேயம் கூட காட்டப்பட வேண்டாமா? வறண்ட நெஞ்சத்தவர்கள் வாழும் உலகமாக இந்த வையம் மாறலாமா?
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன.
32 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள திறந்தவெளி தரை பகுதியில் கூடாரங்களைக் கட்டி, பொதுமக்கள் தங்கியிருந்தனர்.
குறிப்பாக, வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு கீழ், பதுங்கு குழிகளை அமைத்து, தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


குலசேகரம்.சதீஷ்
