கோத்தாவை சந்திக்க இரவோடு இரவாக ஸ்கொட்லண்ட் விரையும் தமிழர்கள்!!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • கோத்தாவை சந்திக்க இரவோடு இரவாக ஸ்கொட்லண்ட் விரையும் தமிழர்கள்!!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்கு ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொண்டுவரும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக பயணித்துவருகின்றார்கள்.

மேலும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு வையகம் அதிர புயலாக எம்மவர்களின் பயணம் இரவோடு இரவாக இங்கிலாந்தின் பல திசைகளில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.இதில் இரண்டாம் தலைமுறையினரும் ஈழ உணர்வோடு அதிகளவில் பங்கு கொள்வதை காணக்கூடியதாக இருக்கிறது .உறவுகளை இழந்து உரிமையை இழந்து எம்மவர்களின் வலி சுமந்த போர்க்குற்றவாளிக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை நோக்கிய பயணத்தின் பொது பேரூந்துகளில் பயணமாகிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகளை சுமந்துவருகின்ற காணொளிகள்

தமிழினப் படுகொலையாளி கொத்தபாயா ராஜபக்சக்கு எதிரான ஆர்ப்பாட்டதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் (யோகி) TGTE MP அவர்களின் பயண காணொளி