
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிரித்தானியாவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கத் யோகலிங்கம் அவர்களின் தேர்தல் பரப்புரைகள் ஹரோ தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது.
பழமைவாதக் கட்சியின் (Conservative Party) சார்ப்பில் போட்டியிடும் இவரின் தேர்தல் பரப்புரையில் பிரதான செயற்பாட்டாளர் நிதர்சன் தவராசா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.


இந்நிலையில் மேற்படி உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் யோகலிங்கம் அவர்களை வெற்றிபெற வைப்பது பிரித்தானியா வாழ் புலம் பெயர் தமிழர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என குறித்த பிரச்சார குழுவினர் தெரிவித்தனர். தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மற்றும் இலங்கையில் இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தப்பித்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள எங்களைப்போன்றவர்களின் பிரச்சினைகளை பிரித்தானிய அரசிற்கும் மக்களிற்கும் எடுத்துச் செல்லும் பாலமாக இருப்பார் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


