

மே1 , மே மாதம் 1 ஆம் திகதி உலகத் தொழிலாளர் தினம் பிரித்தானியாவில் அனைத்துலக நாட்டு மக்களுடன் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றது .இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான பறை இசையுடன் , தமிழர்களின் கலாச்சார உடைகளான வேட்டி , சிவப்பு சேர்ட் அணிந்து உலகத் தொழிலாளர்கள நிகழ்விற்கு பலமாக ஆதரவினைக் கொடுத்து சிறப்பிர்த்து இருந்தனர். இவ் நிகழ்வு லண்டன் FARRINGTON என்ற இடத்தில் ஆரம்பமாகி London Travelsqure என்னும் இடத்தில் மிக உன்னதமாக முடிவடைந்தது.
இதில் விஸ்வர்த்தனன், வாகீசன், குமார் , டென்சிகன், தக்சாயனி , சாதுரியா, டாமியன், , யுவராஜ் , ஜீவராஜா, கெங்காதரன் மற்றும் கோபிநாத் ஆகியோர் இணைந்து இவ் மே தின ஊர்வலத்தில் தமிழரின் பாரம்பரிய இசை பறையை வாசித்து சிறப்பிர்திருந்தனார்.