News

பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமைக்கான கொண்டாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை 17 ஆம் திகதி Central Hall, Westminster இல் இடம் பெற்றது. பிரித்தானிய தமிழ்சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தைப் பாராட்டி, பல துறைகளில் அவர்களின் பங்களிப்புகளிற்கான வாழ்த்துக்களையும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் நீதி, பொறுப்புக்கூறல் […]
Read more

கோத்தாவை சந்திக்க இரவோடு இரவாக ஸ்கொட்லண்ட் விரையும் தமிழர்கள்!!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்கு ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொண்டுவரும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக பயணித்துவருகின்றார்கள். மேலும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு வையகம் அதிர புயலாக எம்மவர்களின் பயணம் இரவோடு இரவாக இங்கிலாந்தின் பல திசைகளில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.இதில் இரண்டாம் தலைமுறையினரும் ஈழ உணர்வோடு அதிகளவில் பங்கு கொள்வதை காணக்கூடியதாக இருக்கிறது .உறவுகளை இழந்து உரிமையை […]
Read more

வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுங்கள் – உலகத் தமிழர்களுக்கு பகிரங்க அழைப்பு

தமிழினத்தைக் கருவறுத்து, தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோட்டாபயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக, மாபெரும் கண்டன எதிர்ப்புப் போராட்டம் நாளை ( 01) ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது. ​பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் காலை முதல் மாலை வரை இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் அணிதிரண்டு வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman)  […]
Read more

‘இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்’ ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவின் படத்துடன் பிரமாண்ட வாசகங்கள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற வாசகங்கள் ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம், அருங்காட்சியகம் மற்றும் பிரபல சந்தைகள் போன்ற பிரசித்தி வாய்ந்த கட்டடங்களில் நேற்று இரவு காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவுள்ள நிலையில் அவரது முகத்துடன் இனப்படுகொலைக்கு நீதி வேண்டுமென்ற வாசங்கள் தமிழ் ஆர்வலர்களால் ஸ்கொட்லாந்தின் பிரசித்தி பெற்ற கட்டடங்களில் ஒளிவிர்க்கப்பட்டுள்ளது.
Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் போராளியான 2வது லெப்டினன்ட் மாலதி அவர்கள் தமிழ் ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்து இன்றுடன் முப்பதினான்கு ஆண்டுகள்

கடந்த கிழமை உலக தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் நினைவு நாளும் 2ஆம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளும் பிரித்தானியாவில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடாத்தப்பட்டது இதில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்துகொண்டு வேங்கைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தி அவர்களுக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள். தமிழ் பெண்களின் வீரத்தையும் எழுச்சியையும் உலகறியச்செய்யும் நாளாக அக்டோபர் 10.திகதி எம்மவர்களால் கடைபிடிக்கப்படுகின்றது எமது விடுதலைப்போரில் முதற்க்க்களப்பலியான பெண்போராளி 2ம் லெப் மாலதியின் 34 ம் ஆண்டு நினைவு நாளன்று […]
Read more

தியாகி திலீபனின் நினைவால் தகர்ந்த யாழ் கோட்டையும் ஈழத்தமிழர்களின் தொல்லியல் சான்றுகளும்

தமிழ்ச்சமூகத்தில் திலீபன் என்ற ஒரு தனி மனிதனுடைய தீர்க்கமான கருத்துக்கள் சமூக ஆழ்மனக் கருத்துக்களாக நிலைத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இன்று திலீபன் தன்னை உருக்கி 34 ஆண்டு கடந்துவிட்டது.   இன்றும் திலீபனின் கனவுகள் அப்படியேதான் நடைபோடுகிறது. ஆனால் அவன் மூட்டிய தீ இன்றும் தமிழர்கள் மத்தியில் கனன்றுகொண்டே இருக்கிறது. ஈழமக்களின் மக்களின் ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் என்பதை திலீபனின் தியாக வேள்வி நடந்த நாட்களில்  நிகழ்கின்ற சம்பவங்களும் அதன் பின்னான […]
Read more

இனப்படுகொலைக்காக இலங்கையை ICC இற்கு பரிந்துரைக்கவும்-பிரித்தானிய தொழிற்கட்சிக்கு வலியுறுத்தல்

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களினால் (Tamils for Labour) நடாத்தப்படும் வருடாந்த மாநாடு தவிசாளர் திரு சென் கந்தையா அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (26.09.2021) பிற்பகல் பிறைற்ரனில் உள்ள கில்ரன் ஹோட்டலில் இடம்பெற்றது. தவிசாளர் சென் கந்தையா அவர்கள் தனது வரவேற்புரையில் இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை கற்பழிப்பு, சித்திரவதை, வலிந்து காணாமல் போதல், கடத்தல், சட்டவிரோத கொலைகள் மற்றும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் ஆகிய வடிவங்களில் இலங்கை இராணுவம் மற்றும் […]
Read more

திலீபன் உண்ணா நோன்பு மேடையில் பதினோராம் நாள்-25.09.2021

இன்று திலீபனின் உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. கோமாவுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப் போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம். அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்?மைதானத்தில் கூடியிருந்த […]
Read more

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை காலால் உதைத்து கைது செய்த பொலிஸார்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்பாக ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸர் நினைவேந்தலை தடுக்கும் நடவடிக்கையினை எடுத்திருந்தனர். இதன்போது நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா என கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்ற […]
Read more

திலீபன் உண்ணா நோன்பு மேடையில் ஒன்பதாம் நாள்-23.09.2021

அதிகாலை 5 மணியிருக்கும். திலீபன் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன. உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை. உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன. கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன. இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். […]
Read more