பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ சுமந்திரன் தலைமையில் நிகழ்ந்த வாதத்தினடிப்படையில் முதல்வர் மணிவண்ணன் விடுவிக்கப்பட்டதாக யாழ் செய்திகள் கூறுகின்றன. முன்னதாக முதல்வர் வி.மணிவண்ணன் யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் மணிவண்ணன் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி […]
கொழும்பில் வேலை பார்க்கும் மாநகர ஊழியர்கள், இதே உடைகளை தான் அணிந்துள்ளார்கள். ஆனால் கொழும்பு மாநகர மேயர் ஏன் கைதாகவில்லை என்று முன் நாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். இது இவ்வாறு இருக்க, கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி மணி வண்ணன் கைது தொடர்பாக கடும் ஆட்சேபம் வெளியிட்டுள்ள நிலையில் மேலதிக விபரங்களை கனடா தூதுவர் திரட்டி வருவதோடு. ஒரு நகர மேயரை கைது செய்யும் அளவுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு […]
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் அவர்களின் கணவர் இளவரசர் பிலிப் தன்னுடைய 99 வயதில் இன்று உலகத்தை விட்டு மறைத்துள்ளார். இங்கிலாந்தின் மகாராணியாக விளங்கும் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி செவ்வாய் கிழமை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் லண்டனில் இருக்கும் தனியார் கிங் எவர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசர், தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் […]
பிரித்தானியாவின் மாகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் பவர்கள் சற்று முன்னர் தனது 99வது வயதில் காலமானார். அவருக்கு நீண்ட நாளாக, இதயக் கோளாறு இருந்து வந்த நிலையில் கடைசியாக 28 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன் நிலையில் அவருக்கு மேலதிகமாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்தே அவர் இன்று காலமானதாக வின்சர் காசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன், கடந்த மார்ச் […]
இலங்கை நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் அடிதடியில் ஈடுபட வருமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, முன்னாள் சபாநாயகரும், இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அழைத்தமையினால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது. இதனையடுத்து 05 நிமிடங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்ததோடு 10 நிமிடங்களின் பின்னரே நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் பறிபோனமைக்கு எதிராகவும், சபாநாயகரின் பக்கச்சார்பான செயற்பாடுகளுக்கு எதிராகவும் சஜித் அணியினர் இன்று நாடாளுமன்றத்தில் […]
யாழ்.மாநகரசபையினால் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல் படையின் சீரூடை விவகாரம், எதிர்பார்த்தபடி சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகிறது. குறித்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்பிற்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது. உயரிய நோக்கம் கொண்ட […]
ஈழத் தமிழர்களின் உரிமைக் குரலாய் ஒலித்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்ந்துள்ளார். ஈழ மண்ணில் கொடும்போர் நடக்கும் காலங்களில் தேவாலயங்களை மக்களின் புகலிடமாக்கி பாதுகாத்தவரும், இலங்கை பேரினவாத அரசால் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்த தகவலை உலகிற்கு அளித்து, இலங்கையின் நயவஞ்சகத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியவருமான பேராயரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. […]
மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக மன்னார் எடுத்து வரப்பட்டது. மன்னார் மாவட்ட கத்தோலிக்க மக்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் இணைந்து வீதியின் இருமருங்கிலும் கருப்புக் கொடிகளை நாட்டி பேரணியில் கலந்து கொண்டனர். தேவன் பிட்டி பகுதிகளில் இருந்து மக்கள் மலர்தூவி மோட்டார் வண்டிகளிலும் வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் மன்னார் ஆயர் இல்லம் வரையில் திருடலை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆயருடைய திருவுடல் மக்களுடைய அஞ்சலிக்காக இன்றைய […]
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸ பொலிஸார் தாக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவருடைய உறவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். களுபோவில பாடசாலை வீதியைச் சேர்ந்த சுதந்திர திசாநாயக்க எனும் நபரை கல்கிஸ்ஸ பொலிஸார் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி கைது […]
ஜேர்மன் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து, 24 ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். முறையே இவர்கள் 2012 மற்றும் 2013 ஆகிய வருடத்தில் இருந்து, குறித்த 2 நாடுகளில் மறைவாக வாழ்ந்து வந்ததாக கூறி, அவர்களை அன் நாடுகள் நாடு கடத்தியுள்ள அதேவேளை. பண்டார நாயக்க விமான நிலையத்தில் வைத்தே சிங்கள புலனாய்வுத் துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதோடு. தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தியும் உள்ளார்கள். ஜேர்மனி 20 பேரையும் சுவிஸ் […]