பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் அம்மையாருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் !

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் அம்மையாருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் !

இன்றுடன் 16 வது நாளை சிகரம் தொட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் அவர்களின் உண்மைக்கும் நீதிக்குமான உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இன்று ஒன்று திரண்ட புலம்பெயர் வாழ்தமிழ் மக்கள் அம்பிகை செல்வ குமார் அவர்களின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

பிரித்தானிய அரசிடம் அவர் வைத்துள்ள 4அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றும் படி இன்றுடன் 16வது நாளாக ஆகாரம் உண்ண மறுக்கும் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதுடன் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறிருக்க பிரித்தானிய அரசிடம் நீதி வேண்டும் நீதி வேண்டும், தாயாரின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவரது உயிரை காப்பாற்று, போன்ற கோசங்களுடன் 100 கணக்கானோர் பிரித்தானியாவின் கொவிட் நடைமுறைகளுக்கமைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளை, இவ்வாறான சூழலில் பெருமளவான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுவந்ததால் அங்கு சில பரபரப்பான சூழல் நிலவியது.