அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது /காவல் துறையினர் பொதுமக்கள் மீது தடியடி

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கைது /காவல் துறையினர் பொதுமக்கள் மீது தடியடி

தமிழின விடியலுக்காய் தன்னையே உருக்கும் தியாக தீபம் அம்பிகை செல்வகுமார் அவர்களின் உண்மைக்கும் நீதிக்குமான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 16ம் நாளான இன்று அவரது வீட்டின் முன் திரண்ட புலம்பெயர் வாழ் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பொது அவரை காப்பற்றுமாறும், 4 கோரிக்கைகளை செவிமடுக்குமாறும் கோசமிட்ட தமிழ் மக்களை அடக்கும் விதமாக பிரித்தானியா பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதன் பொது ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் ஏற்ப்பட்ட வாக்கு வாதத்தில் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அம்பிகை செல்வகுமார் அவர்களின் எழுச்சி பேரணிக்கு தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரளுமாறு இரண்டு தினங்களுக்கு முன்பு செந்தமிழ் செல்வன் சீமான் அவர்களால் அழைப்பு விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.