இலங்கையை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தக்கோரியும் அங்கு நடை பெற்ற இனப்படுகொலைக்கு நீதிகோரியும் கடந்த FEB 27ம் திகதியன்று மதியம் 1மணியளவில் பிரித்தானிய பாராளமன்ற சதுக்கத்தில் ஆரம்பமான அம்பிகையின் அகிம்சை போராட்டம் 17ம் நாளான இன்று வெற்றி இலக்கை கண்டது.
சமூக வலைத்தளங்கள் மூலமும் தமிழ் உணர்வாளர்கள் மூலமும் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் அம்பிகை செல்வகுமார். அவரது திடமான மனதாலும், ஈழ பற்றாலும் 17வது நாளான இன்று முதன் முதலில் தமிழர் வரலாற்றில் வெற்றி இலக்கை கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசிடம் 4அம்சக்கோரிக்கைகளை முன் வைத்தே அகிம்சை வழி போராட்டத்தை தொடங்கியிருந்தார்.அதில் ஏதேனும் ஒன்றையேனும் நிறைவேற்றும் பட்ச்சத்தில் போராட்டத்தை கைவிடுவேன் என்ற திடமான மனதோடும் உறுதியோடும் கூறியிருந்தார் அம்பிகை.
அந்தவகையில் நேற்றைய மாபெரும் மக்கள் பேரணியின் பின் இன்று கோரிக்கைகளில் ஒன்று முழுமையாகவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் உலக தமிழின அமைப்புகள்,அனைத்துலக தமிழ் மக்கள் மற்றும் கட்சிகளினதும், பிரித்தானிய அரசினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கோரிக்கைகளுக்கமைய போராட்டத்துக்கு முடிவு கண்டார்.
அவர் முன் வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல் [IIIM], அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரித்தால் [ICC], இலங்கைக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு -கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்பிற்கான ஐ.நா வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப்பொறிமுறை ஒன்று [IIM]இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் நிரந்தர ஐ.நா கண்காணிப்பாளருக்கு பதிலாக தொடர்ச்சியான கண்காணிப்பு நடைமுறை ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அம்பிகை செல்வகுமார் தனது அகிம்சை வழி போராட்டத்தில் சிகரம் தொட்டு வெற்றி இலக்கை அடைந்துள்ளார். இன்றைய பொழுது பிரித்தானிய நேரம் பி. ப 3 – 5 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை மத தலைவர்கள் மற்றும் அனைத்துலக தமிழர்கள் முன்னிலையிலும் அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் zoom இணையவழி ஊடாக முடித்துக்கொண்டார்.
“ஓடாத மானும் போராடாத இனமும் வாழாது ” என்ற தேசிய தலைவரது சிந்தனைக்கமைய நேற்று நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணிக்கு கிடைத்த வெற்றியென உலக வாழ் புலம்பெயர் தமிழ் மக்களால் பெருமைகொள்ள படுகிறது. எம் உறவுகளின் குரலாய் நின்ற அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு கிடைத்தை மாபெரும் வெற்றிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.