பாகம் 4: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • பாகம் 4: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!
.

அரசியல் காரணியங்களுக்காக, ஈழத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர், ஈழம் குறித்தோ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தைப் பற்றியோ வாய் திறக்காமல், நாற்காலியின் கால்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்த போதிலும், போர் காலக்கட்டத்திலும் சரி, நடப்பிலும் சரி, ஈழ மக்களுக்காக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேரணிகளும் நினைவுக்கூறல் நிகழ்ச்சிகளும் நினைவுறுத்தல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அவ்வகையில், தொடர்ந்து மே 18-ஐ நினைவுக்கூறும் நிகழ்வும் உச்சக்கட்டப் போரினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் நாள்உலகின் பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக்கூறப்படுகிறது.ஆறு கோரிக்கைகளை முன் வைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மே 18ஐ நினைவுக்கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவை #

  1. இலங்கை அரசு மீது சர்வதேசப் போர் குற்ற விசாரணை வேண்டும்
  2. வடக்கு-கிழக்கு பகுதிகளில் இருக்கும் படையினரை மீட்டுக்கொள்ள வேண்டும்
  3. தமிழர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்
  4. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்
  5. காணாமல் போனோரின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்
  6. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்

உச்சக் கட்டப் போருக்குப் பின்னரும் இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளும் அநீதிகளும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றம் செய்வதன் மூலம், தமிழினத்தின் வாழ்வாதார உரிமையைக் கூட சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழர்களுக்கான மறுவாழ்வு மலர்ச்சியினை அது மறுக்கிறது. அவர்களுக்கான வசதிகளும் தேவைகளும் நெரிக்கப்படுகின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஐநாவின் தொடரும் மௌனத்தினாலும் உலக நாடுகளின் அலட்சியங்களினாலும், இலங்கையில் தமிழினத்தின் மீதிலான சிங்களப் பேரினவாதத்தின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இக்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள், ஓர் இனத்தின் அழிவு என்பது உலகின் அழிவிற்கு முதல் புள்ளி என்பதை மறந்து விட வேண்டாம்.

குலசேகரம்.சதீஷ்