தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடைக்கு எதிராக உள்துறை அமைச்சுக்கு மறுபரிசீலனை செய்ய தீர்ப்பாயம் வழங்கிய கால அவகாசம் நெருங்கி வருகின்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை முழுமையாக நீக்கக் கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டத்திற்கான மக்களின் ஆதரவுக்காகவும், பரப்புரைகளுக்குமாக “Walk for lift the ban” எனும் தொனிப்பொருள் தாங்கி வேல்ஸிலிருந்து (wales) வெஸ்மினிஸ்டர் (westminster) வரையான நடைபயணம்.இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது
Wales to Westminster (W2W) 23.04.2021 காலை 10 மணிக்கு Cardiff (The Senedd, Pierhead St, Cardiff CF99 1SN) இல் இருந்து நடைபயணம் Bristol, Swindon, Reading, Slough இன் ஊடாக இலண்டன் மாநகரை 27.04.2021 செவ்வாய்கிழமை வந்தடையவுள்ளது.



