பாகம் 5: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • பாகம் 5: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணி திரளுங்கள், சர்வதேசப் போர் குற்றத்தின் கீழ் இலங்கை விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய்யுங்கள். உலக தமிழர்களே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கரம்கோர்ப்போம் – மே 18-ஐ, சர்வதேச நாளாக நினைவுக்கூர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம் . இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துவோம். அதற்கு நமது ஒவ்வொருவரின் குரலும் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.

2009இல் தமிழினப் படுகொலையை, கூச்ச நாச்சம் சிறிதும் இன்றி, லங்கையின் கொடுங்கோல் அதிபர் – சிங்கள வெறித்தனத்தால் சீறிய நாகப்பாம்பான ராஜபக்சேயும் அவரது ஆட்சியும், லட்சம் தமிழர்களைக் கொன்று 90,000 தமிழச்சிகளை விதவைகளாக்கி, இராணுவ முகாம் என்ற பெயரால் எஞ்சிய தமிழர்களையெல்லாம் – முடிந்த வரை சிங்கள இராணுவ முகாமுக்குள் வெஞ்சிறைக் கைதிகளைவிட மிக மோசமாக அடைத்துப் பழி தீர்த்து, பச்சைப் படுகொலைகளால் ஈழத் தமிழர் தம் இரத்தத்தில் குளித்துக் குதூகலம் அடைந்து, சிங்கள வெறித்தன ஆட்சி கொண்டாடி மகிழ்ந்த நாள் இன் நாள்.

உரிமைக்குப் போராடிய தமிழின மாவீரர்களை – மண்ணின் மைந்தர்களை – காக்கை, குருவிகளைப்போல சுட்டுக் குவித்து பழி தீர்த்தனர்! பழிக்கஞ்சா பகைமையை சொந்த நாட்டின் குடி மக்களான தமிழர்கள் மீதே, தீர்த்துக் கொண்ட கொடிய வரலாற்றின் ரத்தக் கறைப் படிந்த நாள், இந்நாள் 18ஆம் தேதி (18.5.2009). வெள்ளைக் கொடியேந்தி சமாதானப் புறாவாக வந்தவர்களைக்கூட, தார்மீக நியதிகளைக் காலில் போட்டு மிதித்துச் சுட்டுக் கொன்ற கொடுமையை என்ன சொல்ல? மாவீரன் பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக மார்பில் குண்டைப் பச்சைத்தளிர் மீது பாய்ச்சிய பட்சாதாபமற்றவர்களுக்கு – பாசிசப் பதர்களுக்கு தண்டனையே கிடையாதா? போர்க் குற்றவாளி என்று இலங்கை இராஜபக்சே அரசினை, ஐ.நா.வின் விசாரணைக் கமிஷனும், மனித உரிமை ஆணையமும் கூறி, நடவடிக்கை எடுக்கச் சொன்னதெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம் போல


எம் தமிழினம் நாதியற்று, நடு வீதியில் அல்லல்பட்டு அழுத கண்ணீருடன் புலம்பும் நிலையிலும், ஐ.நா. போன்ற அமைப்புகள், உண்மையான அக்கறையும் கவலையும் செலுத்தி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையும் எஞ்சிய ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான வழி வகையும் கண்டிருக்க வேண்டாமா? உலகத் தமிழர்கள் தமிழ்நாட்டு இன உணர்வாளர்கள் நெஞ்சில் இன்னமும் இரத்தம் வடிந்தாலும், செய்வதறியாது திகைத்துக் கை பிசைந்துதானே நிற்கும் அவலம் – வெட்கக்கேடு!




குலசேகரம்.சதீஷ்