NEWS/EVENTS

ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஈழத்தமிழர்கள் 24 பேரை நாடுகடத்தி ஸ்ரீலங்கா அரசிடம் ஒப்படைத்து துரோகம் செய்து விட்டது!

ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்திலிந்து நாடு கடத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் 24 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையினரால் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 ஈழத்தமிழர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜேர்மனிலிருந்து […]
Read more

யாழில் பதற்றம்; நல்லூரிலிருந்த விடுதலைப்புலிகளின் சாதனையாளனின் நினைவு பூங்காவை தீயிட்டு கொளுத்திய கோத்தா அரசு!

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தீப்பரவலுக்கு காரணம் இதுவரைக்கும் எதுவும் தெரியவரவில்லை. மேலும் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
Read more

5வது நாளாக மீட்பு போராட்டம் தோல்வி: சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிப்பு: 250க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேக்கம்.

சூயஸ்: எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலை கப்பலால் உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதித்து, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயை கடக்க முடியாமல் 250க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேக்கமடைந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய கடல் வழித்தடமாக சூயஸ் கால்வாய் விளங்குகிறது. இந்த குறுகிய கால்வாய் வழியாக கடந்தாண்டு மட்டும் 19,000 சரக்கு கப்பல்கள் கடந்துள்ளன. இந்நிலையில், ஆசியா, […]
Read more

இலங்கையில்தொடரும் கண்காணிப்பு மீண்டும் ஏற்படும் அபாயம்!

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபட பிரித்தானியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அலுவலக இரா­ஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார். இலங்கை, தென் சூடான், சிரியா, ஈரான், மியான்மர், பெலாரஸ் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் குறித்த முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவை 46வது அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தது எனவும் […]
Read more

ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி… உண்மையை போட்டுடைத்த இலங்கை அரசு!!

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பை புறக்கணித்த மோடி அரசின் நிலைப்பாட்டை இலங்கை அரசு பாராட்டியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் அவையில் இந்தியா அளித்த ஆதரவை பாராட்டுவதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ‘ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உள்ள 47 நாடுகளில் 22 நாடுகளே நேர்மையாக நடந்துகொண்டுள்ளன.25 நாடுகள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வில்லை. ஐ.நா.மனித உரிமைகள் அவையில் உள்ள நாடுகளுக்கு இது […]
Read more

ஐ.நா தீர்மானம்!!இலங்கையில் அடுத்து நடக்கப்போவது என்ன? செயலில் இறங்கியது OHCHR

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (Office of the High Commissioner for Human Rights(OHCHR)) இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் செயல்முறையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிதியுதவி அளித்தவுடன் மற்ற தொடர்புடைய பணிகள் செயல்படுத்தப்படும் என மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது. […]
Read more

நிறைவேறிய இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா தயக்கம் காட்டியதுஏன்?

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது. இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா,பங்களாதேஷ், உள்ளிட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்த செயல்பாட்டை, தமிழக […]
Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவைகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இந்த நிலையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளது. இந்த நிலையில், 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Read more

ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்பு இன்று ஒத்திவைப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த  இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில் பத்து ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதைத் தொடர்ந்து, ஜெனிவாவில் நடைபெறும் ஐநா சபையின் 46வது  கூட்டத்தொடரில், இனப்படுகொலை குற்றங்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தார்.. […]
Read more

மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்!மியான்மரில் 235 பேர் சுட்டுக்கொலை!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஒரு வருடத்துக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக 6 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ராணுவ அரசுடன் ஒத்துழைக்க மறுத்து மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் 2 வாரங்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து […]
Read more