தமிழர் வாழும் வடக்கு வடகிழக்குப் பகுதிகளில் – சிங்கள இராணுவம் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை; தேர்தலில் வாக்களித்த பின்பும் கூட அங்குள்ள தமிழர்கள் – சொந்த நாட்டுக் குடி மக்களுக்குரிய சுதந்தர நடமாட்ட உரிமைகளைக் கூடப் பெற முடியாத “பிணைக் கைதிகளைப் போலத்தானே” இருக்கின்றனர்? இன உணர்வுகூட வேண்டாம்; சராசரி மனிதநேயம் கூட காட்டப்பட வேண்டாமா? வறண்ட நெஞ்சத்தவர்கள் வாழும் உலகமாக இந்த வையம் மாறலாமா? இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் […]
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணி திரளுங்கள், சர்வதேசப் போர் குற்றத்தின் கீழ் இலங்கை விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய்யுங்கள். உலக தமிழர்களே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கரம்கோர்ப்போம் – மே 18-ஐ, சர்வதேச நாளாக நினைவுக்கூர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம் . இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துவோம். அதற்கு நமது ஒவ்வொருவரின் குரலும் உலகெங்கும் ஒலிக்க வேண்டும். 2009இல் தமிழினப் படுகொலையை, கூச்ச நாச்சம் சிறிதும் இன்றி, லங்கையின் கொடுங்கோல் அதிபர் […]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடைக்கு எதிராக உள்துறை அமைச்சுக்கு மறுபரிசீலனை செய்ய தீர்ப்பாயம் வழங்கிய கால அவகாசம் நெருங்கி வருகின்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை முழுமையாக நீக்கக் கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டத்திற்கான மக்களின் ஆதரவுக்காகவும், பரப்புரைகளுக்குமாக “Walk for lift the ban” எனும் தொனிப்பொருள் தாங்கி வேல்ஸிலிருந்து (wales) வெஸ்மினிஸ்டர் (westminster) வரையான நடைபயணம்.இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது Wales […]
அரசியல் காரணியங்களுக்காக, ஈழத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர், ஈழம் குறித்தோ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தைப் பற்றியோ வாய் திறக்காமல், நாற்காலியின் கால்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்த போதிலும், போர் காலக்கட்டத்திலும் சரி, நடப்பிலும் சரி, ஈழ மக்களுக்காக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேரணிகளும் நினைவுக்கூறல் நிகழ்ச்சிகளும் நினைவுறுத்தல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், தொடர்ந்து மே 18-ஐ நினைவுக்கூறும் நிகழ்வும் உச்சக்கட்டப் போரினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் […]
தமிழீழ விடுதலைக்காக, புலிகளின் போராட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனித்துவமாகவே இருந்து வந்தது. பலவேளைகளின் புலிகளின் கைகள் ஓங்கியிருந்தது. புலிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரியமல்ல என உணர்ந்த சிங்கள இனவாத அரசு, அப்பாவி தமிழ் மக்களைப் பிணை வைத்து பல்வேறு நாடுகளின் உதவியோடு, சூத்திரமாக வீழ்த்தியது. அதர்மமும் அநியாயமும் கொல்லப்பட்டதாக கொக்கரித்தது. ஆனால், இது நிரந்திரமல்ல. மீண்டும் புலிகள் உயிர்த்தெழுவார்கள், தமிழீழம் உதயமாகும் என உலகத் தமிழர்கள் இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த உச்சக்கட்ட போரின் […]
பாகம் 2 இலங்கை அரசு அந்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள் தான் இந்த மே 18. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில், 2009-ம் ஆண்டில், இனவாத இலங்கை அரசால் இக்கொடூரம் நடத்தப்பட்டது. சுமார் 40,000 பேர் அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் விடுதலை புலி உட்பட பெரும்பான்மையோர் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளைச் சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள […]
தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்தது. இன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். அரசியல், […]
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களின் நாட்டுப் படகுகளை கட்டணம் செலுத்தி இலங்கை கடல் எல்லையில் அனுமதிப்பது எனத் தெரிவித்தமை தொடர்பான கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட […]
விடுதலை புலிகள் மீதான தடையினை நீக்கும் செயல்திட்டத்திற்கு ஆதரவு கோரி … பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்க்கிருக்கும் தடையினை நீக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்யறத்திட்டத்திற்கு அரசியல் ரீதியிலான ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் Liberal Democrat’s party தலைவரும் , கிங்ஸ்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் sir Ed Davey ஐ கெளசிகன் சசிகுமாரின் ஒருங்கிணைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ,குணரெத்தினம் யுவராஜ் ,அனோஜன் சிவபாலன் , ,கீதரன் ராசேந்திரா […]
யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், மணிவண்ணன் யாழ் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னரேயே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நீதிமன்றத்தில் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னதாகவே ஊடகங்களுக்கு கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான […]